Monday, April 8, 2013

பகுதி 23 ; சித்திரவதைபட்டுக் கதறும் சித்ராங்கி..

பொழுது விடிந்தது.





எனக்கான சித்திரவதைகள் துவங்கின. முற்றும் துறந்த முனிவர் நிலையில் நான் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள தயாரானேன். என்மீது தண்ணீரை ஊற்றி சுத்தப்படுத்தினார்கள். நெற்றியில் குங்குமம் பூசினார்கள். காட்டு மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை ஒன்றைத் தொடுத்து எனக்கு சூட்டினார்கள். ஒரு பிரமாண்டமான மரத்தின் கீழே என்னை அழைத்துச் சென்றார்கள்.



காலியா ஏதோ சைகை காட்ட, மெய்க்காவலர்கள், பாலியும் சேகியும் கைகளைக் கோர்த்து ஒரு மேடை போல ஆக்கினார்கள். அதன்மீது ஏறி நிற்குமாறு காலியா ஆணையிட்டான். நான் இயந்திரம் போல கீழ்ப்படிந்தேன். இப்போது என் முதுகு மரத்தின் அடித் தண்டை ஒட்டினாற்போல என்னை உயர்த்திப் பிடித்திருந்தார்கள். அந்த மரத்துக்கு இரண்டே கிளைகள். 'ஒய் ' போல விரிந்திருந்த இரு கிளைகளை ஒட்டினாற்போல, என் கைகளை விரித்துவைக்குமாறு சொன்னார்கள். அவ்வாறே செய்தேன்.



காலியா ஒரே தாவலில் மரத்தின் மீது ஏறினான். இரண்டு கிளைகளும் பிரியும் பகுதியில் ஏறி நிற்பதை உணர்ந்தேன். என் பின்னால் நின்றதால் அவன் என்ன செய்யப்போகிறான் என்பது தெரியவில்லை. நிகழ்வுகளை என் முன்னால் சற்று தூரத்தில் நின்றுகொண்டு, சுங், பூனைக்கண்ணி, தாண்டா ஆகியோர் பார்த்துக்கொண்டிருந்தனர்.



திடீரென பச்சேயின் பூனைக் கண்களில் ஆர்வம் மின்னியது. நான் என்னவாயிருக்கும் என்று குழம்பி நின்ற வேளையில் என் இடது உள்ளங்கையில் தீ பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, என் உள்ளங்கையைத் துளைத்துக்கொண்டு ஒரு குத்துவாள் மரத்தின் கிளையில் பதிந்திருந்தது. அது உண்டாக்கிய காயத்தின் வலி பின்னர்தான் உறைத்தது.



ஆ... ஆ.. அம்மா! ஈஸ்வரா.. என்ன செய்வேன்? நான் வாய்விட்டுக் கதறினேன். தன்னிச்சை செயலாக என் கையை விடுவிக்க போராடினேன். வலி அதிகரித்தது. கீழே என்னைத் தாங்கி உயர்த்திப் பிடித்திருந்தவர்கள் என்னைக் கட்டுப்படுத்த போராடினார்கள். உள்ளங்கையில் இருந்து இரத்தம் வழிந்தது. என் வலதுகையின் உதவிகொண்டு இடது மணிக்கட்டை இறுகப் பிடித்து வலியையும், இரத்தப்போக்கையும் கட்டுப்படுத்த முயன்றேன். 



காலியா, என் வலதுகையை முரட்டுத்தனமாகப் பற்றி இழுத்து இன்னொரு கிளையோடு ஒட்டியிருக்குமாறு வைக்க முயன்றான்.



ஐயோ.. வேண்டாம்.. என்னை விட்டு விடுங்கள்.. நான் தாங்க மாட்டேன். ப்ளீஸ்.. சுங்.. உன்னை மன்றாடுகிறேன். என்னை விடுவித்துவிடு. என்னால் முடியவில்லை.



அப்படியென்றால் என் விருப்பத்துக்கு சம்மதிக்கிறாயா..?



அதை மட்டும் வற்புறுத்தாதே.. என்னும் வகையில் நான் தலையை இருபுறமும் ஆட்டினேன். இப்போது, வலது உள்ளங்கையிலும் தீ பாய்ந்தது. அம்மா... இனி முன்பு போல என் விருப்பப்படி உடலை அசைக்க முடியாமல் பிணைக்கப்பட்டிருந்தேன். வேதனை உயிரை உலுக்கியது. இருகைகளிலும் கத்திகள் பாய்ந்து மரத்தோடு தைக்கப்பட்டிருந்தேன். இரு உள்ளங்கைகளையும் மாறி மாறிப் பார்த்து கதறினேன். 



ஈஸ்வரா.. என்னைக் காப்பாற்று.. என்னால் தாள முடியவில்லையே.. அம்மா.. உன்னண்ட என்னையும் அழைச்சுக்கோயேன்.. ஐயோ பாவிகளா.. என்னை விட்டுடுங்கடா.. ம்ம்ம்ம்ம்ம்ங்க்ங்ங்ங்.. ம்ம்ம்ம்!



வலியை ஜீரணிக்க முயன்றேன். இப்போது காலியா மரத்திலிருந்து என் முன் குதித்தான். என்னைத் தாங்கி நின்ற இருவரையும் பார்த்து சைகை காட்ட, அவர்கள் என் கால்களை விடுவித்து அகன்றனர்.



இப்போது என் ஐந்தே முக்கால் அடி உடலின் எடையும் இரு உள்ளங்கைகளில் இறங்க, சொல்லவொண்ணா வேதனை என் தண்டுவடத்தை உருவியது. கால்களுக்கு ஏதேனும் பிடிப்பு கிடைக்குமா என்று மரத்தின் அடிப்பகுதியை துழாவினேன். எதுவும் அகப்படவில்லை. உள்ளங்கையை, ரம்பம் போட்டு அறுப்பது போல இரு கத்திகளும் துன்புறுத்தின. என் தலையை மோதிக்கொண்டு சுயநினைவை இழக்கலாம் என்று பின்புறம் முட்டிப்பார்க்க, அங்கே கிளைகள் பிரிந்துவிட்டதால், எதுவும் தட்டுப்படவில்லை.



ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹாஹாஆஆஆஆஆ .. ம்ம்ம்ம்ம்ம்ம்.. துன்பத்தை விழுங்க என்னால் ஆனவரையில் முயன்றேன்.

No comments: