Sunday, July 29, 2012

பகுதி - 13. முரட்டுத்தோழியைத் தேடி..



நான் அறைக்கு திரும்பியபோது, கீதா ஏதோ விஷம் அருந்தி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தாள். வாய் மட்டும், "உமா என்னை மன்னிச்சுடு.." என்று முணுமுணுக்க, அலங்கோலமாக கட்டிலில் கிடந்தாள். உதவிக்கு குரல் கொடுக்க சக மாணவிகள் திரண்டனர். வார்டனுக்கு தகவல் பறக்க, காதும் காதும் வைத்ததுபோல காரியங்கள் நடந்தன. சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட கீதா பிழைத்துக் கொண்டாள்.

மருத்துவ மனையில் அருகில் இருந்து அவளைக் கவனித்துக்கொண்டேன். அன்று அவள் மன்னிப்பு கேட்டபோதே நான் விட்டுக்கொடுத்திருக்கலாமே என்ற குற்ற உணர்வு என்னைச் சவுக்கால் அடித்தது. மற்ற மாணவிகளோ, நான் தான் கீதாவை தக்க சமயத்தில் கண்டு காப்பாற்றியது போலப் புகழ்ந்தது இன்னும் உறுத்தலாக இருந்தது. கீதா என்னை தேவதையைப் பார்ப்பது போல பார்த்தாள்.

நாளடைவில் கீதாவும் நானும் நெருங்கிய சினேகிதிகள் ஆனோம். ஆனாலும் கீதா மிகவும் பொசெசிவ் ஆக இருந்தாள். நான் சக மாணவி யாரோடாவது நெருங்கிப் பழகினால், அவளுக்குப் பொறுக்காது. அந்த மாணவியைப்பற்றி குறை கூறுவாள். நான் "அப்படியெல்லாம் இருக்காது" என்று மறுத்துப் பேசினால், என்னை அடிக்க வருவாள்; அல்லது அவளையே தண்டித்துக் கொள்வாள்.கொஞ்சம் முரட்டுத்தனமான நட்பு அவளுடையது.

கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ஏதோ குறு குறுவென்ற உணர்வு மேலிட விழித்துப் பார்த்தால், அருகில் கீதா என்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரியும். "என்னடி..?" என்று கேட்டால், " நான் ஏண்டி ஆணாகப் பிறக்காமல் போனேன்..?" என்று என்னைக் கேட்பாள். ஒன்றும் புரியாமல் விழிக்கையில் மெல்ல விளக்குவாள்.

தூங்கும்போது கூட எவ்வளவு அழகா இருக்கே தெரியுமாடி உமா..? கொஞ்சம் கூட உடை கலையாமல், முகத்தை அஷ்டகோணல் செய்யாமல், அலுங்காமல் ஒரு பூவைப் போல தூங்குகிறாயே.. எப்படி உன்னால் முடிகிறது..? மலர்களைப் போல் மங்கை உறங்குகிறாள் என்று பாடவேண்டும் போல இருக்குடி.! நான் மட்டும் ஆம்பிளையா இருந்தால் உன்னைக் கடத்திகிட்டு போயாவது கல்யாணம் பண்ணிக்குவேன்..!

நீ ஆம்பிளையா இருந்தா இங்கே உனக்கு என்ன வேலை..? என்னைத் தூங்க விடுடி.. ப்ளீஸ்..

நீ தூங்கு.. நான் உன்னை ரசிச்சுகிட்டு இருக்கேன்..

அடிப்போடி இவளே.. நீ இப்படி பார்த்துட்டு இருக்கறது எனக்கு டிஸ்டர்பா இருக்காதா..?

பார்த்துட்டு இருக்கக்கூடாதா..? சரி.. நீயே சொல்லிட்டே.. !

கட்டிலில் என் பக்கத்தில் படுத்து அநியாயம் செய்வாள்.மூக்கைக் கடிப்பாள்.. காது அருகே வந்து மூச்சு விடுவாள். காலைத் தூக்கி மேலே போடுவாள்.

ஏய்.. கழுதை.. எனக்கு கூச்சமா இருக்குடி.. ப்ளீஸ் கீதா.. என்னைத் தூங்கவிடு. உன் பெட்டுக்கு போ.

சரிடி.. என்னவோ பெரிசா அலட்டிக்கிறா..தான் ரொம்ப அழகுன்னு கர்வம்.. நீ தூங்குடியம்மா.. குட்நைட்.

அக்கடா என்று கண்ணை மூடினால், விருட்டென்று, என் நைட்டியை மேலே இழுத்துவிட்டு ஓடுவாள்.

சே.. என்ன ஜென்மம் இவள் என்று மனம் வெதும்பும். கடுப்பை அடக்கிக்கொண்டு தூங்க முயன்றால், தன் கட்டிலில் இருந்து குரல் கொடுப்பாள்..

"அந்தப் பாழாப்போன பேண்டீசை நைட்டுல கூட கழட்ட மாட்டியா..? 24 மணி நேரமும் 'உன்னோட அதை' வேடு கட்டியே வெச்சிருக்கியே.. அதான் தம்மாத்தூண்டாவே இருக்குது..!

நீ திருந்தவே மாட்டே.. இனி என்னோட பேசாதே..!

காலையில் எழுந்து பார்த்தால், என் துணிகளை துவைத்து அழகாய் பின் செய்து காயப்போட்டிருப்பாள். முனுஸ் ( வாட்ச்மேன்) மூலம் காஃபி வாங்கிவந்து பிளாஸ்கில் ஊற்றி வைத்திருப்பாள். கண் விழித்ததும் குட் மார்னிங் சொல்லி காஃபியை நீட்டுவாள். இவளா நேற்றிரவு அவ்வளவு கூத்து அடித்தவள் என்று குழம்பும்படியாக, " டிபிகல்" மாணவியாக வலம் வருவாள்.

எப்படியோ அவள் குணத்துக்கு இயைந்துபோக பழகிக்கொண்டு விட்டேன். படிப்பு முடிந்ததும், பிரியும் வேளை வந்துவிட, பித்து பிடித்தவள் போலாகிவிட்டாள். பரிட்சையில் கோட்டை விட்டுவிடுவாளோ என்றுகூட பயந்தேன். ஒருவாறு பிரியாவிடை பெற்று, நான் சென்னையும் அவள் ஸ்ரீரங்கமும் புறப்பட்டோம். நான் சென்னை சென்ற மறுநாளே அவளும் முகவரி தேடிக்கொண்டு வந்துவிட்டாள்.நான்கு நாள் ஆகியும் கிளம்புவதாக இல்லை. அவர்கள் வீட்டில் இருந்து தேடி வந்தனர். சிறுபிள்ளையை, மிட்டாய் கொடுத்து பள்ளிக்கு அனுப்புவதுபோல தாஜா செய்து அனுப்பி வைத்தோம்.

கீதா அந்த வருட*மே தன் மாமா பையனைக் கல்யாணம் செய்துகொண்டாள். பட்டுப்புடவை வாங்கிவந்து அம்மா கையில் கொடுத்து நமஸ்கரித்து பத்திரிகை வைத்து அழைத்தாள். அவள் தங்கை போல அனைத்து மரியாதைகளுடன், திருமணத்தில் கலந்து கொண்டேன். பின்னரும், ஈ மெயில், போன் என்று எங்கள் நட்பு தொடரவே செய்தது. அவ்வப்போது கணவரை அழைத்துக்கொண்டு சென்னை வந்துவிடுவாள். அவள் கணவர் ஒரு வாயில்லாப் பூச்சி.

ஆண்டுகள் உருண்டோட, அவள் பிள்ளை குட்டி என்று ஆனாள். நான், ஃப்ரீ லான்ஸ் அசைன்மெண்ட்டுகள் என்று அலைந்து கொண்டிருந்தாலும், எங்கள் நட்பு அணையாமல் இருந்தது. இந்நிலையில் எனக்கு திருமணம் நிச்சயமானதும், ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

28 வயதாகியும், செக்ஸ் என்ற ஒன்றின் அறிவு எனக்கு பூஜ்யம் ஆகவே இருந்தது. நானும் அதைப் பற்றி சிந்திக்கவில்லை. அம்மாவும் அதுபற்றி விளக்கம் கொடுக்கும் நிலையில் இல்லை. என் நட்பு வட்டமும், கொஞ்சம் டீசண்டான ஆட்கள் நிரம்பியதாக இருந்ததால் மருந்துக்குகூட அதுபற்றி நாங்கள் பேசியதே கிடையாது. மேலும் நான் கடைசிவரை அம்மாவுக்கு துணையாக இப்படியே இருந்துவிடத் தீர்மானித்தபடியால், ஆண்களைப் பற்றிய நினைவோ, கிளர்ச்சியோ எனக்கு ஏற்படவே இல்லை.

திருமணம் என்றவுடன், என் மனதையும், உடலையும் முதல் இரவுக்கு தயார் செய்ய விரும்பினேன். ஒன்றும் தெரிந்துகொள்ளாமல், புருஷனுக்கு எவ்வித ஒத்துழைப்பும் கொடுக்கத் தெரியாமல் பச்சை மண்ணாக கட்டிலில் கிடத்தலாகாது என்று முடிவு செய்தேன். மேலும் ஒரு விஷயம். எங்கள் உறவுக்கார அத்தை ஒருத்தி, தன் முதலிரவில், பாதியிலேயே அழுதுகொண்டு வெளியில் ஓடிவந்து புருஷன் மானத்தை வாங்கினாளாம். திருமணம் போன்ற வைபவங்களில் அந்த அத்தையம்மாவை பார்த்துவிட்டால் எல்லோரும் இன்றும் கூட கிண்டல் செய்வார்கள். அந்த நிலை எனக்கு வேண்டாம்.

இதற்கு என்ன செய்வது என்று சிந்தித்தபோது நினைவுக்கு வந்தவள் கீதாதான். பத்திரிகை கொடுக்கும் சாக்கில் இதற்கு ட்யூஷன் படித்துவிடலாம் என்று ஸ்ரீரங்கம் கிளம்பினேன்.

No comments: